சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பு இடங்களை திரும்ப வழங்கக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசு வழங்கிய மருத்துவ படிப்பு இடங்களில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
தேசிய மருத்துவ ஆணையம் 4 கட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வை முடித்த நிலையில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16, மதுரை எய்ம்ஸில் உள்ள 3 இடங்கள் உள்பட 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு செப்.30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்நிலையில் 83 மருத்துவ படிப்பு இடங்களை திரும்ப வழங்கக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை திரும்ப வழங்க வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்கவும் வலியுறுத்தல். அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் வீணான நிலையில் இவ்வாண்டு 83 இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.