புதுச்சேரி: மருத்துவ படிப்பில் புதுச்சேரி அரசுபள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளியில் கல்வி பயிளும் ஏழை எளிய, கிராமபுற மாணவர்கள் நலன் கருதி, மருத்துவகல்லூரிகளில் அரசின் இடஒதுக்கிட்டில், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தனர். இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதனை ஏற்றுகொண்ட அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு கொண்டுவரபடும் என அறிவித்தார்.
இதற்காக சட்டத்தை இயற்ற ஒப்புதல் கேட்டு அப்போதைய அளுநர் கிரண் பேடிக்கு அனுப்பிவைத்தார். ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிர்ண்பேடி கிடப்பில் போட்டுவந்தார். இது தொடர்பாக அப்போதைய முதல்வர் நாராயணசாமி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி தமிழ்நாட்டை போல் உள்ஓதுக்கீடு வழங்கவேண்டும் என கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த கடிதத்துக்கு எந்தவித பதிலும் தெரிவிக்கபடவில்லை.
இதனை அடுத்து கடந்த சில வருடங்களாக புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது கேள்விகுறியாக இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது என்ஆர்கங்கிரஸ், பாஜக அரச கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆட்சிஅமைத்தது. அப்போதிருந்தே புதுச்சேரி மாநில திமுகவினரும், கூட்டனி கட்சியினரும் தமிழக்த்தை போலவே புதுச்சேரியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்களிலும் தொடர்சியாக ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேர்ந்து படிக்கும் வகையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர்,புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மானவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றிருந்தால் அவர்களுக்கு மருத்துவகல்வி படிக்க 10% உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனை அடுத்து இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் சேரும் வகையிலான நடவடிக்கையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இறங்கியுள்ளார்.