சென்னை: சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூட் தல விவகாரத்தில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிகள் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் யுனானி மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. தட்டிக் கேட்ட யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.