டெல்லி: ஊடகத்துறையினர் மீது ஒன்றிய பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆன்லைன் செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களிடம் டெல்லி சிறப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையைப் பேசும் ஊடகத்தினர் மீது ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு வழக்கு தொடர்ந்து சோதனை நடத்துகிறது.