சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் அரியானா மாநிலத்தை சேர்ந்த மனு பாக்கர் தாய்நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார். தனது கடின பயிற்சி, தொடர் விளையாட்டு, பக்க பலமான பெற்றோர், பயிற்சியாளர் ஆகியவற்றால் வெற்றியைப் பெற்றிருப்பது இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. பதக்கம் வென்ற மனு பாக்கரை தமாகா சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் மனு பாக்கருக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
58