சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் 70 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் ஓட தொடங்கியம் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனே நிறுத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு இயந்திர கோளாறு குறித்து தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த விமான பொறியாளர்கள் குழுவினர் விரைந்து சென்று விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரையிலும் இயந்திரக் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பிற்பகல் 2.15 மணியளவில் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மாலை 5.45 மணியளவில் வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் நேற்று ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் அறிவித்தனர்.
திடீர் இயந்திர கோளாறு சென்னை – தூத்துக்குடி விமான சேவை ரத்து
0