சென்னை: நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக மதுரைக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து 70 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறை விமானி கண்டுபிடித்தார். தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானி எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது.
இயந்திரக் கோளாறு: மதுரைக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கம்
0