*கனிமொழி எம்பி பேச்சு
சங்கரன்கோவில் : தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் அவைத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தொகுதி பார்வையாளர்கள் சங்கரன்கோவில் ராமஜெயம், வாசுதேவநல்லூர் தனுஷ் எம் குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசினார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ‘கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். பின்னர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, பராசக்தி, மாரிச்சாமி, மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், பொன்முத்தையாபாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டியன், சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, ராமச்சந்திரன், வெள்ளத்துரை, பால்ராஜ், குணசேகரன், நகரச்செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி கிழக்கு அந்தோணிசாமி, புளியங்குடி மேற்கு நாகூர் கனி, பேரூர் செயலாளர்கள் குருசாமி, ரூபிபாலசுப்பிரமணியன், மாரிமுத்து, சேதுசுப்பிரமணியன், நகராட்சி சேர்மன்கள் (சங்கரன்கோவில்) உமாமகேஸ்வரி,
(புளியங்குடி) விஜயா, மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் இளைஞரணி முகேஷ், மாணவரணி உதயகுமார், ஐடி அணி கிப்ட்சன், விவசாய அணி மாடசாமி, இலக்கிய அணி குருவசந்த், பொறியாளர் அணி பசுபதிபாண்டியன், வக்கீல் அணி பிச்சையா, தொண்டரணி அப்பாஸ், ஆதிதிராவிடர் அணி மாரியப்பன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, விளையாட்டு மேம்பாட்டு அணி காசிராஜன், மகளிரணி சிவசங்கரி, நெசவாளர் அணி சந்திரன், மருத்துவர் அணி மணிகண்டன், கலை இலக்கிய பகுத்தறிவு அணி பிரேம்குமார், தொழிலாளர் அணி சரவணன், விவசாய தொழிலாளர் அணி சேதுராமன், அயலக அயலக அணி அமிதாப், மீனவர்அணி சாமுவேல், வர்த்தகர் அணி சரவணகுமார், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.