மதுரை: இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு மோடி அரசு முனைந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்களின் பெயரை மாற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.