சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர்.
ஏற்கனவே அறிவித்ததன்படி, நேற்று மாலையுடன் விண்ணப்ப பதிவு, நிறைவடைந்துள்ளது. அதன்படி, 72 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பக்கட்டணத்தையும் செலுத்தி வருவதனால், அதிகாரப்பூர்வ எண்ணிக்கைகள் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதாக மருத்துவர் மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது.