சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டான்செட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு ஜூலை 14ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்..!!
0