மாயவரம் சிட் பண்ட், கடந்த 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 78ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறைகளில் பல கோடி முதலீடு செய்து வெற்றிகரமாக நடத்திவரும் அம்பா குழுமத்தின் ஓர் அங்கமாக, அருண் (அருணாசலம் பழனியப்பன்) தலைமையில் இயங்குகிறது. வாடிக்கையாளரின் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒழுங்குமுறை சட்டங்களுக்கு உடன்பட்டு முறையான களங்கமற்ற வெளிப்படை தன்மையுடன் மாயவரம் சிட்ஸ் செயலாற்றி வருகிறது. வாடிக்கையாளரின் நிதி தாமதமின்றி அவர்களுக்கு சென்றடைய செய்கிறது.
இந்த நிறுவனம், ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள சீட்டுகளை மக்களுக்காக நடத்துகிறது. பொதுவாக சேமிப்பு என்பது அனைவருக்கும் குறைவாகவே இருக்கும். மாயவரம் சிட்ஸ் நிறுவனம், சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உறுதுணையாக அமைகிறது. அவசர தேவைக்கோ, பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கோ, வீடு, மனைகள், வாகனங்கள் வாங்குவதற்கோ மாயவரம் சிட்ஸ்-ன் பல்வேறு சீட்டு திட்டங்கள் உதவுகிறது. குடும்பத்துடன் உல்லாச பயணம் செல்வதற்கும் சீட்டில் சேர்ந்து பயனடையலாம்.