அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் அனுராதா (45). இவர் கடந்த மாதம் 21ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில், புகார் அளித்தார். அதில், ‘‘தனது கணவர் சதீஷை (47) காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சதீஷ் தனது வீட்டில் இருந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து ,அவரின் செல்போன் நம்பரை வைத்து டவர் மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம், சதீஷின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது செய்யாறு மாவட்டத்தை காண்பித்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று சதீஷை மீட்டு கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.