சென்னை: காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவு:
“காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி” எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது. பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும். உழவர் பெருமக்கள் வளம் காணட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
0