பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘1956ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால் மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்’’ என்று கூறியிருந்தார். இது ஒரு நாளிதழில் ெவளியானதாக அவர் கூறியிருந்தார். இதற்கு அந்த நாளிதழும் அப்படி ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறிவிட்டது. இருந்தும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி குழந்தைபோல அடம் பிடித்து வருகிறார். நான் கூறியதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கு. போய் எடுத்து படியுங்கள் என்று அண்ணாமலை கூறுகிறார். குற்றச்சாட்டு சொன்னவருதானே ஆதாரம் காட்ட வேண்டும். ஆனால், நம்ம போய் தேடி கண்டு பிடிக்கணுமாம். இதுக்கு பேருதான் கத்துக்குட்டி அரசியல்னு சொல்வாங்க…
போற போக்குல அடிச்சு விடுற கதை குறித்து ஆதாரம் கேட்டால், எல்லா பத்திரிகை மற்றும் ஊடகத்தையும் குறை சொல்கிறார். இதுக்கு சிறந்த உதாரணம் நேற்று கோவையில் நடந்த பிரஸ் மீட்தான். ‘நீட் தேர்வில் பூஜ்ஜியம் எடுத்தாலும் முதுகலை மருத்துவ படிப்பிற்கு சேரலாம்’ என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ‘கடந்த ஆண்டு கட்ஆப் மார்க் 50 சதவீதம் இருந்தது. இந்தியாவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் சீட்கள் இருந்தது. இதில், பல சீட்கள் முழுமை அடையவில்லை. குறிப்பாக டீச்சிங் கோர்ஸ் நிரம்பவில்லை. எனவே, எம்பிபிஎஸ் இறுதி தேர்வின் மதிப்பெண்ணை கட்ஆப் மதிப்பெண்ணாக எடுத்து கொண்டு டீச்சிங் கோர்ஸ் நிரப்ப இந்த முறையை கொண்டு வந்துள்ளனர். இதில், எவ்வித சர்ச்சையும் இல்லை. கவுன்சலிங் அடிப்படையில் தான் செல்ல முடியும். இது தொடர்பாக தெளிவான அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் அறிவிப்பை தெளிவாக படித்துவிட்டு வாங்க’ என்று நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இதனாலதான் உங்கள லெப்ட் ஹாண்டல டீல் பண்ணுறேன் என்று தெரிவித்தார். ஆனா உண்மையில்லையே அவரு சொன்ன புள்ளி விவரங்கள் அனைத்தும் பொய்னு ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.
நாடு முழுவதும் மொத்த இருக்கிற எம்பிபிஎஸ் சீட்டே 1,00,226 தான். முதுகலை மருத்துவ படிப்புக்கு 64,059 சீட் தான். இரண்டையும் சேர்த்தாலே 1,64,285 சீட் தான் வருது. ஆனால் அண்ணாமலை முதுகலை மருத்துவ படிப்புக்கு மட்டுமே ஒரு லட்சத்து 80 ஆயிரம் சீட்டுகள் இருக்குனு அடிச்சி விட்டாரு. இதுல வேற நிருபர்கள் எல்லாரும் தரோவா தகவலோடு வந்திருக்கணும்னு சொல்றாரு. இதனால்தான் அவர வாயிலையே வடை சுடுறவருனும், போற இடத்துல எல்லாம் ஏதாவது ஒன்னு படிச்சிட்டு வேற எதோ தப்பா பேசி மாட்டிக்கிறவரும்னு சொல்றாங்க. அப்படிதான் அண்ணா விஷயத்திலையும், முதுகலை மருத்துவ சீட் விஷயத்திலையும் கதைவிட்டு மாட்டிக்கினாரு..
‘நானும் ரவுடிதான்.. நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்…’ என்று வடிவேலு காமெடி செய்வதுபோல் நானும் தலைவருதான்.. தலைவருதான்… பேசிட்டு வர்றாரு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை. ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும், அரசியலுக்கு அவரு புதுசுதான். ஒரு ஐபிஎஸ் அதிகாரி வரலாறு நன்கு படித்து இருப்பார் என்றுதான் அனைவரும் நினைத்தோம். ஆனால், அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கும், அவரையே அவர் பில்டப் செய்ததற்கும் இதுவரைக்கும் எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. இதுல என்ன சிரிப்புனா அவர் சொல்வதெல்லாம் உண்மை உண்மை என தம்பட்டம் அடிக்கிறாரு… ஆனால், அதெல்லாம் பொய்னு ஆதாரம் வெளி வந்தா அதுக்கு அப்புறம் பத்திரிகையாளர்களையே கொஞ்சம் நாள் சந்திக்காம எஸ்கேப் ஆகிடுவாரு. இதுதான் ஐபிஎஸ் அண்ணாமலை ஸ்டைல். இதுல பத்திரிகையாளர்களை கிண்டல் செய்கிறேன் என்கிற தென்னாவட்டுல அவர் பேசுறது பழம் தின்னு கொட்ட போட்ட அரசியல் தலைவர்களையே முகம் சுழிக்க வைக்கிறது. இதில் பாஜ மூத்த தலைவர்களும் அடங்கும்.
11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்கள் ஐபிஎஸ் பணியில் 2 லட்சம் வழக்குகள் போட்டேன் என்று அண்ணாமலை கூறினார். ஆனால், அவர் 2011 முதல் 2019 வரையில் இடைப்பட்ட 9 ஆண்டுகள்(முழுமையாக நிறைவடையவில்லை) மட்டுமே அண்ணாமலை ஐபிஎஸ் பணியில் இருந்துள்ளார். இவர் பணியாற்றிய மாவட்டங்களில் மொத்தம் வழக்குகளே 20 ஆயிரத்தை தாண்டாத நிலையில், 2 லட்சம் வழக்குகள் என கூறி உள்ளார். இதேபோல், என் வாழ்க்கையில் இதுவரை 20,000 புத்தகங்கள் வரை படித்து இருப்பேன் என்றார். தற்போது அவருக்கு 39 வயதாகிறது. 39*365 நாட்கள் என்று கணக்கு போட்டாலும் 14,235 நாட்கள் ஆகும். இவருக்கு பிறக்கும் போது படிக்கும் ஞானம் வந்துவிட்டதா? அப்படி என்றாலும் 20,000 புத்தகங்களை எப்படி படிக்க முடியும்? அடுத்த ரபேல் வாட்ச் சர்ச்சை. இதற்கு பில் கேட்டால் ஏதோ இரு பேப்பரை காட்டிவிட்டு பெரிய உருட்டு உருட்டுனார். இந்த மாதிரி பல உருட்டுகளை காட்டியவர் அவர் பிறக்காத கால கட்டத்தில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்துபோல் கதை சொல்லி வருகிறார் என்கின்றனர் நெட்டிசன்கள்.