லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலைய நடைமேடையில் பயணிகள் ரயில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா ரயில் நிலையத்தில் 2வது நடைமேடைக்கு சாகுர் பாஸ்தி – மதுரா மின்சார ரயில் நேற்று இரவு 11 மணிக்கு வந்துள்ளது. அதிவேகம் காரணமாக திடீரென அந்த ரயில் நடைமேடையை உடைத்து கொண்டு ஏறியது. இந்த சம்பவத்தால் நடைமேடையின் மீது நின்று கொண்டு இருந்த மக்கள், அலறி அடித்து சிதறி ஓடின. விபத்தில் பயணி ஒருவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் வேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். மேலும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.அப்போது ரயில் என்ஜின் தடம் புரண்டது எப்படி என்பது பற்றி தெரியவில்லை. அதோடு அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் மதுரா – டெல்லி ரயில் பாதையில் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. மால்வா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ், பாந்தரா டேர்மினல் உள்ளிட்ட பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.