சென்னை : சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அதில் “கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் மாணவர்களின் P.E.T வகுப்புகளைக் கடன் வாங்காதீர்கள். விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுங்கள். முடிந்தால், உங்களின் Science மற்றும் Mathematics வகுப்புகளிலும் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்,”என்றார்.