* ஐபிஎல் லீக் சுற்று ஆட்டங்கள் முடிய சரியாக இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்நிலையில் தர்மசாலாவில் இன்று இரவு நடைபெறும் 58வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
* இந்த 2 அணிகளும் இதுவரை 33 ஐபிஎல் போட்டிகளில் மோதி இருக்கின்றன.
* அவற்றில் பஞ்சாப் 17, டெல்லி 16 போட்டிகளில் வென்றுள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக டெல்லி 231, பஞ்சாப் 202 ரன் குவித்துள்ளன.
* குறைந்தபட்சமாக பஞ்சாப் 104, டெல்லி 67 ரன்னில் இன்னிங்சை முடித்துள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் டெல்லி 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, 3ல் வெற்றி பெற்றுள்ளது.
* அக்சர் படேல் தலைமையிலான டெல்லி, கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.
* நடப்புத் தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 11 லீக் போட்டிகளில் களம் கண்டுள்ளன. அவற்றில் பஞ்சாப் 7-3 என்ற கணக்கிலும், டெல்லி 6 – 4 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளன.
* டெல்லி அணி, தான் ஆடிய முதல் 4 போட்டிகளிலும் வென்று அசத்தியது. அதன் பிறகு ஆடிய 6 போட்டிகளில் 4ல் தோல்விதான் கிடைத்தது. கடைசியாக ஐதராபாத்தில் விளையாடிய போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லியை, சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து மழை காப்பாற்றி, ஒரு புள்ளியை பெற்றுத் தந்தது.