டெல்லி: மேட்ச்-பிக்சிங் தேர்தல்களால் ஜனநாயத்திற்கு அபாயம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
“மேட்ச்-பிக்சிங் தேர்தல் ஜனநாயகத்துக்கு அபாயம்”
மராட்டியத்தின் 2024 சட்டமன்றத் தேர்தல் பாஜகவின் மேட்ச் பிக்சிங் தேர்தல் என ராகுல்காந்தி விமர்சனம் செய்தார். மகாராஷ்ட்ராவில் நடந்தது போன்று பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கலாம் எனவும் ராகுல்காந்தி வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக எங்கெல்லாம் தோல்வி சந்திக்கும் சூழலில் உள்ளதோ அங்கெல்லாம் மேட்ச் பிக்சிங் தேர்தல் நடக்கலாம்.
பீகாரில் மேட்ச்-பிக்சிங் தேர்தல் நடக்கலாம்-ராகுல்
நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்குள் கேள்விகளை எழுப்பி, பதில்களை கோர வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் தேர்தல் சாதனங்களை வலுப்படுத்த வேண்டும். போலி வாக்காளர்கள், ஆதாரங்களை மறைத்து மேட்ச்-பிக்சிங் தேர்தல் நடந்துள்ளது . வாக்காளர் பட்டியல், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை குப்பையில் போடுவதற்காக அல்ல. தேர்தல் ஆதாரங்கள் அழிக்கப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.