நாகர்கோவிலில்: நாகர்கோவிலில் பெண் மருத்துவருக்கு முதுநிலை படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பேராசிரியை கைது செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். முடித்துள்ள சுதிமா என்பவரிடம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். சுதிமாவின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறி அவரது தந்தை ஆனந்த கென்னடியிடம் ஜான்சி கூறியுள்ளார். பேராசிரியை ஜான்சி கூறியதை நம்பி மருத்துவர் ஜானகிராமன், அவரது தந்தையிடம் ரூ.23 லட்சம் தந்துள்ளார். புகாரை அடுத்து பேராசிரியை ஜான்சியை கைது செய்த நிலையில் மேலும் இருவரை போலீஸ் தேடி வருகிறது.