சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலும், வேறு பலருக்கு 700 கி.மீக்கு அப்பாலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ஒரு மாணவருக்கு 500 கி.மீக்கும் அப்பால் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டால், அவர் அந்த மையத்திற்கு குறைந்தது 2நாள் முன்னதாக செல்ல வேண்டும். அங்கு அறை எடுத்து தங்க வேண்டும். அதற்காக பெருந்தொகை செலவழிக்க வேண்டும். எனவே, தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்து விட்டு, மாணவர்களை விருப்பம் தெரிவித்துள்ள தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.