உதகை: கூடலூர் அருகே தாயை பிரிந்து தவித்த யானை குட்டி, யானைகள் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நேற்று காலை மசினகுடி -மாயார் சாலை ஓரத்தில் தாயை பிரிந்த யானைக்குட்டி சுற்றித்திரிந்தது பற்றி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையை தாய் பிரிந்து தனியாக இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து யானை குட்டி சுற்றித்திரிந்த இடத்துக்கு சென்ற வனத்துறையினர் அதனை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ட்ரோன் உதவியுடன் தாய் யானை நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர் சீகூர் வனத்தில் அசூரா மட்டம் பகுதியில் யானை கூட்டம் இருப்பதை அறிந்தனர். குட்டி யானையை நேற்று இரவு அங்கு கொண்டு சென்று 3 யானை கூட்டங்கள் இருந்த இடத்தில் விட்டு வந்தனர் வனத்துறையினர். யானை குட்டியின் நடமாட்டத்தை 3 தனி வனக்குழுவினர் கண்காணித்து வருவதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.