புதுடெல்லி: குத்துச்சண்டை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரிகோம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) விளையாட்டு வீரர்கள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மேலும் அதன் நிர்வாக குழு உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் கமிஷனுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், ‘ஐஓஏவின் விளையாட்டு வீரர்கள் கமிஷன் அமைப்பில் நல்ல அனுபவங்கள் கிடைத்தது. அந்த கமிஷனில் எனது பொறுப்புகளை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். எனவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ எனக் கூறியுள்ளார். ராஜினாமா செய்வதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.
மேரிகோம் ராஜினாமா
0