திருமலை: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் போட்டியிடுவதற்கான தொகுதிகளை கேட்டு முடிவுக்காக காத்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் நேற்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் கட்சி முடிவை அறிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டாததால் முதற்கட்டமாக சி.பி.எம். கட்சி தனித்து போட்டியிட 17 தொகுதிக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.