புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி. கடந்த 19ம் தேதி நெஞ்சக நோய் தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் தன்மையை மருத்துவர்கள் வௌியிடவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வௌியிட்டுள்ள அறிக்கையில், “சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சுவாச நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் சீதாராம் யெச்சூரி உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.