சென்னை: ஒன்றிய அரசுக்கு எதிராக பேரணி செல்ல அனுமதி கோரி மார்க்சிஸ்ட் தொடர்ந்த வழக்கில் டிஜிபி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி நாளை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 21 முதல் 30ம் தேதி வரை பிரசார பயணம், பேரணிக்கு அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.