Tuesday, March 19, 2024
Home » மாருதி சுசூகி ஜிம்னி

மாருதி சுசூகி ஜிம்னி

by Kalaivani Saravanan

மாருதி சுசூகி நிறுவனம், ஜிம்னி எஸ்யுவியை டெல்லியில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏற்கெனவே அறிமுகம் செய்திருந்தது. இந்த கார், அடுத்த மாதம் சந்தைப்படுத்தப்படலாம் என தெரிகிறது. எதிர்பார்ப்புகள் கூடியுள்ள நிலையில், இந்த காரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

ஆல் வீல் டிரைவ் கொண்ட இந்த காரில் ஜெட்டா, அல்பா என 2 வேரியண்ட்கள் உள்ளன. இதில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்கள் இடம்பெற்றிருக்கும் எனவும், காரின் ஷோரூம் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.14 லட்சத்துக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

eight + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi