மாருதி சுசூகி நிறுவனம், சுசூகி இ-விட்டாரா என்ற எலக்ட்ரிக் காரை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 49 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 346 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 142 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். டாப் வேரியண்ட்டில் 61 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. இதிலுள்ள மோட்டார் 172 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 428 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
இங்கிலாந்து விலையுடன் ஒப்பிடுகையில் இந்திய மதிப்பில் காரின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.35 லட்சம். இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும், இந்தியச் சந்தையில் இதன் விலை இங்கிலாந்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், மகிந்திரா பிஇ6 , எம்ஜி இசட்எஸ் இவி ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.