மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் கார். பாரத் கார் மதிப்பீட்டு திட்டத்தில் சோதனை செய்யப்பட்டு, 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. பாரத் புதிய கார் மதிப்பீட்டு சோதனையில் முதன் முதலாக பரிசோதிக்கப்படும் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 32 புள்ளிகளுக்கு 29.46 புள்ளிகளை இந்தக் கார் பெற்றுள்ளது. இதுபோல் சிறுவர்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 49 புள்ளிகளுக்கு 41.57 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம், டிசையர் வேரியண்டில் உள்ள அனைத்து கார்களுக்கும் 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் மாருதி பலேனோ கார், பாரத் புதிய கார் மதிப்பீட்டுச் சோதனையில் 4 ஸ்டார்களைப் பெற்றுள்ளது. பலேனோவில் உள்ள 4 வேரியண்ட்களான சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் அல்பா ஆகிய அனைத்தும் மேற்கண்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்தக் காரில் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, பிரேக் அசிஸ்ட் உட்பட பல பாதுகாப்பு அசம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பலேனோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 32 புள்ளிகளுக்கு 26.52 புள்ளிகள் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 49க்கு 34.81 புள்ளிகள் பெற்றுள்ளது.