மாருதி நிறுவனம் சமீபத்தில் செலரியோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டு அம்சமாக அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து பிரஸ்ஸா கார்களின் அனைத்து மாடல்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள் இடம் பெறும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வேரியண்ட்களுக்கு ஏற்ப ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை அதிகரித்துள்ளது. இதன்படி துவக்க வேரியண்டான எல்எக்ஸ்ஐ ஷோரூம் விலை ரூ.8.54 லட்சத்தில் இருந்து ரூ.15,000 உயர்ந்து ரூ.8.69 லட்சமாக உயர்ந்துள்ளது.
விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ சிஎன்ஜி, விஎக்ஸ்ஐ ஏடி ஆகியவை ரூ.5,000 உயர்ந்துள்ளன. இசட் எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி, இசட்எக்ஸ்ஐ ஏடி ஆகியவை ரூ.11,000 உயர்ந்துள்ளன. டாப் வேரியண்ட்களான இசட்எக்ஸ்ஐ பிளஸ் மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி ஆகியவற்றில் ஏற்கெனவே ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள் உள்ளதால் இவற்றில் விலையில் மாற்றம் இல்லை. டாப் வேரியண்டான இசட் எக்ஸ்ஐ பிளஸ் ஏடி ஷோரூம் விலை சுமார் ரூ.13.98 லட்சம்.