கோவை: கோவை மருதமலை மலைப்பாதையில் பழுது நீக்கி செப்பனிடும் பணி நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதை செப்பனிடும் பணி ஒருமாதம் நடைபெறும் என்பதால் அதுவரை இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் பேருந்து, படிப்பாதையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.