Wednesday, February 28, 2024
Home » மருதமலை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 25, 26ம் தேதிகளில் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை

மருதமலை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 25, 26ம் தேதிகளில் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை

by Suresh

கோவை: மருதமலை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில், கோவிலுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. படி வழியாகவும் கோவில் பஸ்கள் மூலமாகவும் மட்டுமே மலைக்கு செல்ல முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது; “மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூச் தேர்த்திருவிழா வருகின்ற 18-01-2024 முதல் 26-01-2024 முடிய மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. தைப்பூச தேர்திருவிழா நாட்களான 25-01-2024 மற்றும் 26-01-2024 ஆகிய நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்ககளில் செல்லவும் மலைப்பாதையில் நடைப்பாதையாக செல்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

மலைப்படிகள் வழியாக திருக்கோயிலின் பேருந்து மூலம் மலை கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். மேற்படி தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் துணை ஆணை செயல் அலுவலர் செவஹர்சினி, ஜெயகுமார் தலைவர் அறங்காவலர் குழு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யாராசரத்தினம் ஆகியோர் செய்து வருகின்றனர்” என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

2 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi