Thursday, April 18, 2024
Home » அதிக குழந்தைகளை பெற்று தரும் பெண்ணை கல்யாணம் பண்ணுங்க…பாஜ பொதுச்செயலாளர் அட்வைஸ்

அதிக குழந்தைகளை பெற்று தரும் பெண்ணை கல்யாணம் பண்ணுங்க…பாஜ பொதுச்செயலாளர் அட்வைஸ்

by Ranjith

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் நேற்று நடந்த சமுதாய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜ மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசுகையில், ‘‘பிள்ளைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளும் ஜாதிதான் ஜெயிக்க இயலும். எந்த ஜாதியும், மதமும் பிள்ளை பெறுவதை சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறதோ அந்த மதமும் ஜாதியுமே ஜெயிக்கும். நம் சமூகத்தை வளர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும்.

மணப்பெண்ணை தேர்வு செய்யும்போது, நகையோ, பணமோ எதிர்பார்க்கக் கூடாது. எத்தனை குழந்தை பெற்றுத்தருவாய் எனக்கேட்டு அதிகப்படியான குழந்தையை பெற்றுத்தரக்கூடிய மணமகளை தேர்வு செய்து, மணம் செய்து கொள்ளுங்கள். இந்தியா ஜனநாயக நாடு. இங்கு தலையை எண்ணுவது ஜனநாயகத்தின் வேலை. எண்ணிக்கையை வைத்துதான் தெருவில், கிராமத்தில், அரசியலில், நாடாளுமன்றத்தில் மரியாதை. இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்துக்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

You may also like

Leave a Comment

5 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi