சென்னை: திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் டாக்டரை திருமணம் செய்வதாக 80 பவுன் நகை, ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி சக்கரவர்த்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவாகரத்து ஆனவர்களை குறிவைத்து சக்கரவர்த்தி மோசடி செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 17க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் முன்ஜாமின் தரக்கூடாது என பெண் டாக்டர் தரப்பு வாதிட்டது. திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர் என நீதிபதி டீக்காராமன் கூறினார்.