Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

பெரம்பூர்: புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (32). சூளையில் உள்ள தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார். ராமதாஸ், கடந்த சில மாதங்களாக, தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறி தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், மது போதையில் அடிக்கடி தனது அம்மாவை பயமுறுத்துவதற்காக தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இவரை குடும்பத்தினர் காப்பாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி செஞ்சி பகுதியை சேர்ந்த பிரியா என்பவருடன் ராமதாஸுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால், மாமியார் சுகுணாவுடன் கடந்த 8ம் தேதி திண்டிவனத்தில் உள்ள ராமதாஸின் அண்ணன் ரமேஷ் வீட்டிற்கு சென்று, அங்கு தங்கி, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ராமதாஸ் மட்டும் புளியந்தோப்பு பகுதியில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராமதாஸ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராமதாஸின் அக்கா ராதா, இரவு 9 மணி அளவில் ராமதாஸ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ராமதாஸ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமதாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.