தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா தென்னவநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர், சென்னையில் ஒரு கம்பெனியில் டிரைவராக உள்ளார். அங்கு வேலை பார்த்த சிதம்பரம் தில்லைவிடங்கன், குண்டுமேடு பகுதியை சேர்ந்த 22வயது பெண்ணை 2 வருடங்களாக காதலித்துள்ளார். அவர் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவே, சென்னையில் இருந்து கும்பகோணம் அழைத்து வந்துள்ளார். பின்னர், கும்பகோணம் அருகே உள்ள ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்ற கார்த்திக், காதலியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், காதலியை திருவிடைமருதூரில் உள்ள ஒரு சிவன்கோயிலுக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு சென்றவர் திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது கார்த்திக், ஆபாச வார்த்தைகளால் திட்டி திருமணம் பற்றி பேசினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
திருமணம் செய்வதாக அழைத்து சென்று சென்னை இளம்பெண்ணை பலாத்காரம் செய்த காதலன்: கோயிலில் விட்டுவிட்டு ஓடியவர் கைது
previous post