Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

திருமணத்துக்காக வந்து தங்கியபோது பெரியம்மா வீட்டில் 28 சவரன் அபேஸ்: இளம்பெண் மீது புகார்

புழல்: சென்னை புழல் சிதம்பரம் நகர் அம்பத்தூர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுகுமார் (60). லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (53). கடந்த மே மாதம் இவர்களின் உறவினர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்காக உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு அவரது தங்கை மகளான ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையைச் சேர்ந்த அக்‌ஷயா (22) என்பவர் வந்து தங்கினார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அக்‌ஷயா சொந்த ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே பீரோவில் இருந்த 28 சவரன் நகைகள், ₹4 லட்சம் ஆகியவற்றை அவர் திருடிச் சென்றுவிட்டதாக அக்‌ஷயா மீது புழல் காவல் நிலையத்தில் உமா மகேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அக்‌ஷயாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.