மும்பை: கடந்த வாரம் பங்குகளின் விலை உயர்ந்ததால் 9 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டுமே ரூ.95,523 கோடி உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.29,634 கோடி அதிகரித்து ரூ.20,29,711 கோடியாக உயர்ந்தது. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.17,168 கோடி அதிகரித்து ரூ.16,15,114 கோடியாக உயர்ந்தது. இந்துஸ்தான் யுனிலீவர் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.15,225 கோடி உயர்ந்து ரூ.6,61,151.49 கோடியாக அதிகரித்துள்ளது.