சென்னை: மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் ஏதும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். பணத்தை திரும்ப செலுத்த விஷால் என்ன திட்டம் வைத்திருக்கிறார் ? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உங்களது சொத்து விவரங்களை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தாக்கல் செய்து விட்டீர்களா?. மேலும், கடன் பெற்றபோது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விஷால் அதனை படிக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து படத்தில் நடிப்பீர்கள்; அதன் மூலம் பணம் பெறுவீர்கள்; ஆனால் கடனை திரும்ப செலுத்த மாட்டீர்களா? என விஷாலிடம் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.