டெல்லி: மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநிலம் சார்ந்த இதுபோன்ற பிரச்சனைகளை உரிய அமைப்பு முன்பு அணுக வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேனா நினைவு சின்ன விவகாரத்தை பொறுத்தவரை பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம் தான் உரிய அமைப்பு என நீதிபதிகள் தெரிவித்தனர். பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என தமிழக அரசு தரப்பு குற்றம்சாட்டியது. மனுவை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்ததை அடுத்து மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றார்.