சென்னை : சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் (25) மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்பு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். காரை ஓட்டிய அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினி மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய மூவரும் ஐடி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
மெரினா கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
0