சென்னை: சென்னை மாநகராட்சி .துணை மேயர் மகேஷ்குமார் அளித்த பேட்டி: மெரினாவை சர்வதேச தரத்தில் அழகுபடுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்கிறோம். பின்னர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தற்காலிக கட்டமைப்புகள் மூலம் திறந்தவெளி திரையரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் போன்றவை உருவாக்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை ரசிக்க உருவாக்கியது போன்று, முதியோர் ரசிக்கவும் பிரத்யேக வசதி, இசை நீரூற்று உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்குகள் அமைக்க திட்டம்: இசை நீரூற்றும் வருகிறது
previous post