Wednesday, June 19, 2024
Home » மார்ச் மாத வாகன விற்பனை

மார்ச் மாத வாகன விற்பனை

by Lavanya

கடந்த மாதம் விற்பனையான வாகன விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளன. டூவீலர்களை பொறுத்தவரை கடந்த மாதம் 1,83,004 டூவீலர்கள் விற்பனை ஆகியுள்ளன. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் இந்த விற்பனை 1,52,287 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி 38 சதவீதம் அதிகரித்து 1,30,881 ஆக உள்ளது. இதுபோல் வணிக பயன்பாட்டு வாகனங்களை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை 9 சதவீதம் உயர்ந்து 37,389 ஆகவும், ஏற்றுமதி 42 சதவீதம் அதிகரித்து 14,630 ஆகவும் உள்ளது. ஒட்டு மொத்த அளவில் டூவீலர்கள் மற்றும் பயணிகள் வாகன விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 2,20,393 ஆக உளள்து. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் விற்பனை 1,86,522 ஆக இருந்தது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை ஆகிய இரண்டையும் சேர்த்து ஒப்பிடும்போது விற்பனை 25 சதவீதம் அதிகரித்து, மொத்தம் 3,65,904 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. வாகன நிறுவனங்களின் அறிக்கைகளின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

You may also like

Leave a Comment

3 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi