சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் மார்ச் 10ம் தேதி ஞானசேகரனை மகளிர் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி ஆஜர்படுத்துகிறது. அண்மையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 112 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எஸ்.ஐ.டி தாக்கல் செய்தது. ஞானசேகரனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில் அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. மார்ச் 10ம் தேதி ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் விசாரணை தொடங்கும் என தகவல் வெளியாகியது.
மார்ச் 10ல் ஞானசேகரனை ஆஜர்படுத்துகிறது எஸ்.ஐ.டி..!!
0