டெல்லி: மராட்டியத்தில் விவசாயிகள் நாள்தோறும் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் மூன்றே மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவெறும் புள்ளி விவரம் அல்ல; 767 குடும்ங்கள் இனி மீளமுடியாத சூழலில் உள்ளன. விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் மராட்டிய பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக ராகுல் குற்றச்சாட்டு வைத்தார். விதைகள், உரங்கள், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விளைபொருளின் ஆதரவு விலைக்கு உத்தரவாதம். விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய கோரினால் அவர்கள் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது எனவும் கூறினார்.
மராட்டியத்தில் விவசாயிகள் நாள்தோறும் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்: ராகுல் காந்தி குற்றசாட்டு
0