மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விளை நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கும் இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.