ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொலகொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியின கிராமத்தில் உள்ள மக்களிடம் கடந்த 2016ம் ஆண்டு சில மாவோயிஸ்ட்டுகள் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்து மூளைச்சலவை செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கு ஊட்டி குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான பெண் மாவோயிஸ்ட் சுந்தரி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கம், மாவோயிஸ்ட் சுந்தரியை வரும் 6ம் தேதி (நாளை)வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சுந்தரியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
மாவோயிஸ்ட்டுக்கு போலீஸ் காவல்
0