டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மனுபாக்கர். டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்து மனு பாக்கர் வாழ்த்து பெற்றார். வரலாற்று சாதனை மற்றும் எதிர்கால முயற்சிகளுக்கு சோனியா காந்தி வாழ்த்துகளை தெரிவித்ததாக மனுபாக்கர் தகவல் தெரிவித்துள்ளார்.