திருவனந்தபுரம்: மணிப்பூர் கலவரத்திற்கு பேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்த பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கு போனிலும், வாட்ஸ் ஆப் மூலமும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றி சுராஜ் வெஞ்ஞாரமூடு கொச்சி காக்கநாடு போலீசில் புகார் செய்துள்ளார். மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்த நீங்கள், ஆலுவாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்டதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறி சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.