டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு சிறு விளக்கம் அளிக்க கூட பிரதமர் தயாராக இல்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர் என்று கூறினார்.